» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சலில் 400 கிலோ ரேசன்அரிசி கடத்தியவர் கைது

வியாழன் 13, ஜூன் 2019 12:18:50 PM (IST)

குமரி மாவட்டம் குளச்சலில் அனுமதியின்றி ரேசன்அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். 

குளச்சல் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் அனுமதியின்றி சுமார் 400 கிலோ ரே‌ஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர் களியக்காவிளை மீனச்சல் பகுதியை சேர்ந்த ராஜன்( 48) என்பதும், ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து ராஜனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory