» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் வீடுகள் இடிந்தது

வியாழன் 13, ஜூன் 2019 11:56:23 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆவது நாளாக புதன்கிழமை மழை நீடித்தது. மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன.
 
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 8ஆம் தேதி தொடங்கி யதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.  கேரளத்தில் கன மழையாக உருவெடுத்துள்ள நிலையில், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் சாரலாக நீடித்து வந்தது. கோடை வெயிலின் தாக்கம் முற்றிலும் தணிந்து, குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷ்ணத்துக்கு பருவ நிலை மாறியது. 

நாகர்கோவில் நகரில் புதன்கிழமை அதிகாலை முதல் மழை விட்டு, விட்டு பெய்ததால் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி பள்ளிக்குச் சென்றனர். வள்ளவிளை கடலோர கிராமத்தில் கடல் கொந்தளிப்பால் 20 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் 10 வீடுகள் முற்றிலும் இடிந்தன. வீடுகளில் வசித்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். நீரோடி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வள்ளவிளை, நீரோடி பகுதிகளில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory