» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்கு 4 பேர் மீது வழக்கு

புதன் 12, ஜூன் 2019 6:07:07 PM (IST)

மார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியினை சேர்ந்தவர் ராஜகுமாரி (47).இவரது வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த விஜிலா (30) என்பவருக்கு ஒத்திக்கு விட்டுள்ளனர். ஆனால் காலக்கெடு முடிந்ததும் விஜிலா வீட்டினை காலி செய்யவில்லை என தெரிகிறது. வீட்டை காலி செய்யுமாறு ராஜகுமாரி கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராஜகுமாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த விஜிலா மற்றும் அவரது கணவர் உறவினர் ஆகியோர் ராஜகுமாரியை தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த ராஜகுமாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory