» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்

புதன் 12, ஜூன் 2019 5:40:14 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் இன்று (12.06.2019) நடைபெற்றது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு வட்டங்களுக்கு 1428-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்துக்கு, விளவங்கோடு வட்டத்திலுள்ள 55  கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் மாதம் 12-ஆம் தியதி முதல்ஜூன் மாதம் 19-ம் தியதி  வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 

வாளை வட்டம், தோவாளை குறுவட்டத்தில் வீரமார்த்தாண்டன்புதூர் கிராமம், தோவாளை கிராமம், ஆரல்வாய்மொழி வடக்கு கிராமம், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமம்,  குமாரபுரம் கிராமம், செண்பகராமன்புதூர் கிராமம், மாதவலாயம் கிராமம், சண்முகபுரம் கிராமம திருப்பதிசாரம் கிராமம் ஆகிய ஒன்பது வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து 15 தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவன், தோவாளை வட்டாட்சியர் சொக்கலிங்கம்,  தோவாளை வட்டாட்சியர்அருளரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory