» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடனுதவி : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 11, ஜூன் 2019 4:10:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 25% தமிழக அரசு மானியத்துடன் ரூ.10.00 லட்சம் வரை தொழிற் கடனுதவி பெற நடப்பு ஆண்டிற்கு யு.ஒய்.இ.ஜி.பி. திட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தினை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற,

• 18 வயதிற்கு மேற்பட்ட, அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவராவர். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டுள்ளது.

• குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

• குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

• விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

திட்ட மதிப்பீட்டில், 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும். திட்டத்தின் கீழ் வங்கியிலிருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய 1 வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டிற்கென தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து

v.s.sridharanJun 11, 2019 - 10:36:33 PM | Posted IP 162.1*****

Superb

v.s.sridharanJun 11, 2019 - 10:36:33 PM | Posted IP 162.1*****

Superb

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory