» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதன் 22, மே 2019 3:55:45 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மறுநாள் ஒருவரும், காயமடைந்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்?  தமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவின் கீழ் அனுப்பிய சம்மன்களில் இறுதிமுடிவு எடுக்கக் கூடாது என்றும 107, 111 பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மனும் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து

நிஹாமே 22, 2019 - 05:36:14 PM | Posted IP 172.6*****

ராம்போ...கலவரம் உண்டாக்கியவர்களை விட்டுவிட்டு போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு.

ராம்போமே 22, 2019 - 05:12:22 PM | Posted IP 172.6*****

போராடுவது சரி - கலவரம் உண்டாக்கினால்?

மீனவன்மே 22, 2019 - 04:25:54 PM | Posted IP 172.6*****

சபாஷ் சரியான போட்டி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory