» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

புதன் 22, மே 2019 1:26:57 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். 

சுசீந்திரம் அருகே கீழமணக்குடியை சேர்ந்தவர் கிதியோன் ராஜ் (வயது 23). இவர் கடந்த மாதம் மணக்குடியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிதியோன் ராஜ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத், ஆட்சியர் பிரசாந்த்வடநேரேவிடம் பரிந்துரை செய்தார். 

இதனைத் தொடர்ந்து  கிதியோன் ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்டஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி சுசீந்திரம் போலீசார், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory