» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கணவர் கண்முன் மனைவி கடத்தல் தக்கலையில் பரபரப்பு

புதன் 22, மே 2019 1:11:21 PM (IST)

தக்கலை அருகே கணவன் கண் எதிரிலேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தக்கலை அருகே மருதூர் குறிச்சி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் கென்ஸ் (வயது 35). இவர் கேரளாவில் காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார்.
 
இவரது மனைவி மிஸ்பா. இவர்களுக்கு சாயல், ஜெர் சித் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் பைக் மற்றும் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர்.வீட்டில் இருந்த மிஸ்பாவை கணவன் கண் எதிரிலேயே அந்த கும்பல் தூக்கிச் சென்றது. தனது மனைவியை தூக்கிச் செல்வதை பார்த்த கென்ஸ் தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அந்த கும்பல் கென்சை தாக்கியது. 

இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தக்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டது. அந்த கும்பலிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும். கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory