» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

துப்பாக்கிச்சூடு நினைவு தினம்: திமுக, கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அஞ்சலி

புதன் 22, மே 2019 11:34:17 AM (IST)தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு திமுக, கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு திமுக சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த 13பேரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், மாநகர செயலளார் ஆனந்த சேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், நிர்வாகிகள் செல்வராஜ், ஆறுமுகம், குருசாமி, கோட்டுராஜா, ஜெயகுமார் ரூபன், சுரேஷ்குமார், பிரதீப், கீதாமுருகேசன், பாலசுப்பிரமணியன், மதிமுக மாநில துணைச் செயலளார் மல்லை சத்யா, மாவட்ட செயலளார்கள் ரமேஷ், புதுக்கோட்டை செல்வம், இளைஞர் அணி செயலளார் விநாயகா ரமேஷ், நிர்வாகிகள் நக்கீரன், முருகபூபதி, காங்கிரஸ் நிர்வாகிகள் சிஎஸ முரளிரதரன், டேவிட் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அழகுமுத்து பாண்டியன், மாடசாமி, சேகர், தமிழர் தேசிய கொற்றம் வியனரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நினைவஞ்சலி 

துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு  சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி  சிபிஎம் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவன்,ஒ ன்றிய செயலாளர் சங்கரன், புறநகர்  செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்,மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜ், வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், சீனிவாச ராகவன், சுப்பு முத்துராமலிங்கம், வாமனன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், கே.பி.ஆறுமுகம், ரவீந்திரன், பேச்சிமுத்து,முருகன்,சண்முகராஜ்,மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், குமாரவேல், புவிராஜ், பூமயில், முத்து, ஜோதிபாசு, முத்துக்குமார், ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், ஆறுமுகம், நம்பிராஜன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜாய்சன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் மறைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி தாமஸ் மலர் தூவி மரியாதை செய்தார். இதில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீவை. எஸ்.சிவராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

கேனைமே 22, 2019 - 08:59:49 PM | Posted IP 162.1*****

இந்த அரசியல் வாதிகள் துப்பாக்கி சூடு நடந்த நாளில் அங்கே இருந்தார்கள் ஆனால் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்காது, எல்லாரும் ஒளிஞ்சிகிட்டாங்க. இப்போ சும்மா போட்டோ வுக்கு போஸ் குடுக்க வந்து இருக்கிறார்கள்.

ராம்போமே 22, 2019 - 05:16:32 PM | Posted IP 172.6*****

அரசியலுக்கு பதிமூன்று உயிர்கள் பலி - வருத்தமாக இருக்கிறது

தூத்துக்குடி மக்கள்மே 22, 2019 - 03:12:22 PM | Posted IP 172.6*****

ஆழ்ந்த அனுதாபங்கள்

ராஜாமே 22, 2019 - 12:32:23 PM | Posted IP 172.6*****

ஜெய் ஹிந்த்

தூத்துகுடியன்மே 22, 2019 - 12:08:23 PM | Posted IP 172.6*****

ஆழ்ந்த அனுதாபம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory