» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த போராளிகளுக்கு அஞ்சலி : தூத்துக்குடியில் மக்கள் சோகம்!!

புதன் 22, மே 2019 10:57:49 AM (IST)தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13பேருக்கு ஓராண்டு நினைவஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம்  தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் கந்தையா, சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஸ்னோலின், ஜான்சி ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏபிசி சண்முகம்,  காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, தெர்மல் ராஜா, மதிமுக துணைப் பொதுச் செயலளர் மல்லை சத்யா, மீனவர் சங்க பிரதிநிதி கயாஸ், பேராசிரியை பாத்திமாபாபு, வழக்கறிஞர் அதிசயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
 இதுபோல் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தவர்களின் கல்லறைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவி ஸ்னோலின் கல்றையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க போராளி தமிழ்மாந்தன், சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், துப்பாக்கிச்சூட்டில்  பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து

மீனவன்மே 22, 2019 - 03:11:11 PM | Posted IP 162.1*****

கடவுளின் தீர்ப்பு அருகில் உள்ளது

கணேஷ்மே 22, 2019 - 02:02:03 PM | Posted IP 172.6*****

Rip

RAMAமே 22, 2019 - 12:52:15 PM | Posted IP 172.6*****

BLACK DAY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory