» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி

செவ்வாய் 21, மே 2019 10:51:32 AM (IST)

தூத்துக்குடியில் இரு வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பைக் விபத்துக்களில் பிளம்பர் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் ஜெயகுமார் (26). பிளம்பர்.  நேற்று இரவு 10மணியளவில் தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - பாளை. மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி நீதிமன்றம் அருகே உள்ள வேகத்தடையை கடக்க முயன்றபோது குறுக்கே ஒரு பெண் சென்றாராம், இதனால் திடீர் பிரேக் போட்டாதால் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்றி இறந்தார். இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு விபத்து 

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே திருச்செந்தூர் ரோட்டில் கக்கன்ஜி நகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த 40வயது  மதிக்கத்தக்க நபர் அவ்வழியே சென்ற கார் மோதி உயிரிழந்தார். அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்மே 21, 2019 - 11:50:44 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி நீதிமன்றத்தில் அருகில் வேகத்தடையை அமைத்தது யாரு ?? சில வக்கீல்கள் தானே போராட்டம் நடத்தி அமைத்தனர் ? எங்கு வேகத்தடை உள்ளதோ அங்கு "வேகத்தடை அருகில் உள்ளது" என்று போர்டு அமைக்க வேண்டும் ...வேகத்தடை முன்கூட்டியே தெரிந்தால் உயிர்கள் காப்பாற்றப்பட்டியிருக்கலாம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory