» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் அமைதி நிலவ ஆலோசனைக்கூட்டம்

திங்கள் 20, மே 2019 6:15:32 PM (IST)தூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா,தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகரில் வருகிற 22.05.2019 (முழு அமைதி நிலவிட இன்று  மதியம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையில் விசைப்படகு மீனவர்கள், முத்துக்குளியல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட எஸ்பி., பேசுகையில் கடந்த 24.05.2018 அன்று நான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றேன். அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித சிறிய பிரச்சனை கூட வரவில்லை.

இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த தூத்துக்குடி பொது மக்களாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போன்று வருகிற 22.05.2019 அன்றும் எவ்வித சிறிய பிரச்சனைகள் கூட வராமல் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் பொது மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் காவல்துறை சட்டத்திற்குட்பட்டு உங்களுக்கு எந்த உதவியும், எந்த நேரத்திலும் செய்யத்தயாராக இருப்பதாகவும் கூறினார்.  

இந்த ஆலோசனைசக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகர மக்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம் என்றும், பொது மக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ் முன்னிலை வகித்தார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேத ரத்தினம் மற்றும் பொன்ராமு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம்  சிவ செந்தில்குமார், தெர்மல் நகர் ரஞ்சித்குமார், தென்பாகம் ஜீன்குமார்  உட்பட பல இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ராகவேந்திராமே 21, 2019 - 03:54:02 AM | Posted IP 108.1*****

இந்த கூட்டத்தில் நானும் கலந்துவகொண்டோன்..இதில்பேசிய மத்திய பாக இன்ஸ்பக்டர் ஜெயபிராகஷ் சார்..தூத்துக்குடியின் வரலாறு...கல்வெட்டு சம்பந்தமாக சிறப்பாக பேசினார்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory