» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பல பெண்களை ஏமாற்றி கடத்திய சர்ச் ஊழியர் போலீசில் பிடிபட்டார்

ஞாயிறு 14, மே 2017 6:41:40 PM (IST)

கேரளா இளம்பெண்ணை  திருமண பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்வதாக கூறி, திற்பரப்பு லாட்ஜிக்கு அழைத்து வந்த சர்ச் ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் பல பெண்களை இது போன்ற ஏமாற்றி வெளியிடங்களுக்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளமாநிலம் நெடுமங்காடு, ஆநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(33). இவருக்கு திருமணமாகி 2குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் உபதேசியராக உள்ளார். கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்வதற்கு முன் ஆணும், பெண்ணும் திருமண பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். இதே போன்று ஆநாடு பகுதியில் உள்ள சர்ச்சில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வாலிபர்களுக்கு நெய்யாற்றின்கரை பகுதியில் திருமண பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை சேர்ந்த 27வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த பெண்ணிடம் ராஜேஷ் உனக்கு திருமண பயிற்சி வகுப்புக்கு செல்லவேண்டும் என திடீரென கூறியுள்ளார். இதற்காக திருமண பயிற்சி வகுப்பு செல்வதற்காக அந்த இளம்பெண் சர்ச்சுக்கு வந்துள்ளார். அப்போது உபதேசியர் ராஜேஷ், நெடுமங்காட்டில் இருந்து ஏராளமான பெண்கள் திருமண பயிற்சி வகுப்புக்கு வேனில் செல்கின்றனர். அவர்களுடன் வேனில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றி நெடுமங்காடுக்கு அழைத்து வந்துள்ளார். நெடுமங்காடு வந்ததும் வேன் சென்றுவிட்டது. எனவே நானே உன்னை நெய்யாற்றின்கரை அழைத்து செல்வதாக கூறி திற்பரப்பு பகுதிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் பைக் இடம் மாறி வந்துள்ளது. இதை கண்டதும் இளம்பெண் ராஜேஷிடம் இது வேறு இடம் போன்று தெரிகிறது என கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ் குறுக்கு வழியாக அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். இவ்வாறாக திற்பரப்பு பகுதிக்கு இளம்பெண்ணை  அழைத்து வந்துள்ளார் ராஜேஷ். பின்னர் இங்கு தான் திருமண பயிற்சி வகுப்பு நடப்பதாக கூறி ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார்.

லாட்ஜூக்கு சென்றதும் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், ராஜேஷின் வக்கிர புத்தியை அறிந்து கொண்டார். பின்னர் நைசாக லாட்ஜில் இருந்து வெளியே வந்து அழுதுகொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ராஜேஷை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், அவரை நன்கு கவனித்து குலசேகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பெண்களை ஏமாற்றி கடத்தியதாக ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல பெண்களை ஏமாற்றியது அம்பலம்


சர்ச்சுகளில் பாதிரியாருக்கு அடுத்தபடியாக மக்களால்  மதிக்கப்படுவர் உபதேசியர் என்று அழைக்கப்படும் சர்ச் ஊழியர்கள். இதனை பயன்படுத்தி ராஜேஷ் பல்வேறு பிரச்னைகளுக்காக தன்னை நம்பி பிரார்த்தனைக்கு வருபவர்களிடம் எல்லை மீறிய சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். சர்ச்சில் அதிக ஈடுபாடுடன் இருப்பதால் யாரும் இவரை சந்தேகப்படவில்லை.

இதனை நன்கு பயன்படுத்திகொண்ட இவர், குடும்ப பிரச்னை மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு தன்னிடம் வரும் பெண்களின் பின்னணியை தெரிந்து கொள்வார். பின்னர் இதே போன்று பல பெண்களை வெளியிடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். தற்ேபாது இளம்பெண்ணை திருமண பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்வதாக  ஏமாற்றி திற்பரப்பு வந்த போது மாட்டி கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory