» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை அளித்த ஆசிரியர் : டியூசன் சென்டர் அடித்து உடைப்பு

சனி 4, மார்ச் 2017 2:21:23 PM (IST)

புதுக்கடை அருகே பத்தாம்வகுப்பு மாணவிக்கு டியூசன் ஆசிரியர் செக்ஸ்தொல்லை கொடுத்ததால் டியூசன் சென்டரை அடித்து நொறுக்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கன்னியாகுரி மாவட்டம் புதுக்கடை அருகே ஒரு கட்டிடத்தின் மாடியில் தனியார் டியூசன் சென்டர் ஒன்று உள்ளது. மத போதகர் ஒருவர் டியூசன் சென்டரை நடத்தி வருகிறார். அவரது மகனும் அடிக்கடி டியூசனுக்கு வந்து ஆசிரியராக மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்துவார். மேலும் கடற்கரை கிராமங்களிலும் டியூசன் சென்டர்களை நடத்தி வருகின்றனர். குறி்ப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தனித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகின்றனர். 

இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .இந்நிலையில் வரும் 8ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தனித்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வந்துள்ளது. இதனை வாங்குவதற்க்காக மாணவ மாணவிகள் டியூசனுக்கு வந்து வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு ஒரு மாணவி ஹால் டிக்கெட் வாங்க வந்துள்ளார். 

அப்போது டியூசனில் இருந்த நிர்வாகியின் மகன் அந்த மாணவியிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனே வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்க்கு சென்ற மாணவி டியூசனில் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு டியூசனுக்கு வந்துள்ளனர். 

அங்கு டியூசன் நடத்தும் மத போதகரின் மகனை காணவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் டியூஷன் சென்டரை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு புதுக்கடை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் எதுவும் கொடுக்கவில்லை .மேலும் பொதுமக்கள் கூறுகையில் இந்த டியூனை நடத்தும் மத போதகர் என்ன படித்துள்ளார் என்று கூட தெரியவில்லை. இங்கு கிராமபுறங்களை சேர்ந்த ஏழை மாணவ மாணவிகளும் படிக்கின்றனர். இங்கு படிக்கும் சில மாணவிகளிடம் டியூசன் நடத்தும் மத போதகரின் மகன் தனது சில்மிஷத்தை காட்டியுள்ளார். வெளியில் தெரிந்தால் மான பிரச்னை என கருதி மாணவிகள் வெளியில் சொல்லாமல் டியூசனிலிருந்து நின்றுள்ளனர் என கூறினர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory