» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம்: ரஷிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சனி 2, நவம்பர் 2024 11:22:52 AM (IST)
உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசிலியன் டாலர் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ரஷியாவின் அரசு ஊடகம் ஒன்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது யூடியூப் தளத்தில் முடக்கியது. இதற்கு எதிராக ரஷிய நீதிமன்றத்தில், வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ரஷிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 20 டெசில்லியன் அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளது.
20 டெசிலியன் என்பது, இரண்டுக்கு பின்னால் 33 ஜீரோக்கள் வரும். இது ஒட்டுமொத்த உலக ஜிடிஜியை காட்டிலும் சுமார் 20 கோடி மடங்கு பெரிய தொகையாகும். இந்த அபராத தொகையுடன் 9 மாதங்களுக்குள் சேனலை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கும் ரஷிய நீதிமன்றம், கூகுள் இதை செய்யத்தவறினால் அபராதம் இரண்டு மடங்கு ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் : ரஷிய முன்னாள் அதிபர்
திங்கள் 23, ஜூன் 2025 5:51:04 PM (IST)

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான உரிமை மீறல்: வட கொரியா கண்டனம்!
திங்கள் 23, ஜூன் 2025 11:32:50 AM (IST)

தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு தரும் டெலிகிராம் சி.இ.ஓ.,!
சனி 21, ஜூன் 2025 11:43:04 AM (IST)

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)
