» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் : ஜோ பைடன் அறிவிப்பு
வெள்ளி 27, செப்டம்பர் 2024 12:47:04 PM (IST)
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
கடந்த 2023-ம் ஆண்டில், அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கவனிக்கும் துறை துணை அதிபர் கமலா ஹாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைத் தடுப்பதற்கும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இன்னும் 6 வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகரித்து வரும் துப்பாக்கி அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தில் இன்று கையெழுத்திடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜோ பைடன், "அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும். அமெரிக்கா துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் : ரஷிய முன்னாள் அதிபர்
திங்கள் 23, ஜூன் 2025 5:51:04 PM (IST)

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான உரிமை மீறல்: வட கொரியா கண்டனம்!
திங்கள் 23, ஜூன் 2025 11:32:50 AM (IST)

தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு தரும் டெலிகிராம் சி.இ.ஓ.,!
சனி 21, ஜூன் 2025 11:43:04 AM (IST)

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)
