» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானில் நினைவு சின்னம் முன் நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:18:37 PM (IST)

ஈரானில் நினைவு சின்னம் முன் நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது குற்றம்சாட்டப்பட்டது.. விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளது. அத்துடன் அந்த பெண் இஸ்லாமிய பெண்கள் அணியவேண்டிய முக்காடு அணியவில்லை. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர்களாக அறியப்படும் இந்த இளம் ஜோடி மீது, ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
மக்கள் கருத்து
IndianFeb 7, 2023 - 12:34:37 PM | Posted IP 162.1*****
modi ethuku da anga vara poraru muttal
கடவுள் பக்தன்Feb 2, 2023 - 08:04:59 PM | Posted IP 162.1*****
முட்டாள் நாடு. 1971 போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுதம் வழங்கிய நாடு. அமெரிக்கா விமானம் அங்கு குண்டு போட்டாலும் தப்பே இல்லை. இங்கு சில முட்டாள்கள் இருக்கிறார்கள் அதனால் மோடி வந்தாலும் தப்பே இல்லை. ஜெய் ஹிந்த்.
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா
செவ்வாய் 28, மார்ச் 2023 12:07:42 PM (IST)

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் நிறுவ ரஷ்யா முடிவு: ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை
திங்கள் 27, மார்ச் 2023 12:38:20 PM (IST)

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்: காந்தி சிலை அவமதிப்பு!
சனி 25, மார்ச் 2023 11:47:49 AM (IST)

ஜனநாயகத்தை மதிக்கிறோம்: ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து!
சனி 25, மார்ச் 2023 10:20:32 AM (IST)

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து கனடா சீக்கியர் மீண்டும் கின்னஸ் சாதனை!
வெள்ளி 24, மார்ச் 2023 5:32:14 PM (IST)

இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
வெள்ளி 24, மார்ச் 2023 4:26:56 PM (IST)

போலி indian அவர்களுக்குFeb 8, 2023 - 10:55:16 AM | Posted IP 162.1*****