» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே ஒரு ராக்கெட்டை ஏவினால் போதும்: போரிஸ் ஜான்சனை மிரட்டிய புதின்!

திங்கள் 30, ஜனவரி 2023 4:51:49 PM (IST)ஒரே ஒரு ராக்கெட்டை ஏவி விட்டால் போதும். அதற்கு எனக்கு ஒரு நிமிடம் ஆகும் என்று உக்ரைனில் போர் தொடங்கும் முன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷிய அதிபர் புதின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷிய எல்லையையொட்டி அமைந்துள்ள உக்ரைன் நாடு பல்வேறு வளங்களை கொண்டுள்ளது. உலக நாடுகளுக்கு உணவு பொருட்களை அள்ளி வழங்கும் அட்சய பாத்திரம் போன்ற நிலவளங்களை தன்னகத்தில் வைத்துள்ளது. எனினும், சோவியத் ரஷியா உடைந்த பின்னர், எஞ்சியிருக்கும் நாடுகளில் ஒன்றாக உக்ரைனும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தீர்வு ஏற்படுவதற்கு போர் யுக்தியை ரஷியா கையிலெடுத்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான போரை ரஷியா தொடுத்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு, உக்ரைனுக்கு உதவும் நோக்கில், அதேவேளையில் ரஷிய தாக்குதலை நிறுத்தும் வகையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகருக்கு புறப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது. உக்ரைனுக்கு ராணுவ படைகளை புதின் அனுப்புவதற்கு முன்பு, ஜான்சனை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். இதுபற்றி ஜான்சன் கூறும்போது, ரஷிய அதிபர் புதின் என்னுடன் பேசும்போது ஒரு கட்டத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். புதின் கூறும்போது, போரிஸ், உங்களை புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், ஒரே ஒரு ராக்கெட்டை ஏவி விட்டால் போதும். அதற்கு எனக்கு ஒரு நிமிடம் ஆகும். அல்லது அதுபோன்று வேறு எதுவும் நடக்கலாம் என்று மிரட்டினார் என ஜான்சன் கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு, மேற்கத்திய நாடுகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக செயல்பட்ட ஜான்சன், இதனால் சற்று மிரண்டு போனதுபோல் பேசியுள்ளார்.ஜான்சன் புதினிடம் பேசும்போது, நேட்டோவில் உக்ரைன் உடனடியாக சேருவது போல் எதுவும் இல்லை என கூறியுள்ளார். அதுபோக ரஷியாவின் தாக்குதலால், ரஷிய எல்லையையொட்டிய நாடுகள் நேட்டோவில் இணைவது அதிகரிக்குமே தவிர, குறையாது என கூறியுள்ளார்.

அதற்கு புதின், போரிஸ், நேட்டோவில் உக்ரைன் தற்போது இணையாது என நீங்கள் கூறுகிறீர்கள். உடனடியாக இணையாது என்றால் என்ன பொருள்? என வினவியுள்ளார். அதற்கு பதிலாக ஜான்சன், வருங்காலத்தில் நேட்டோவில் அது இணைய போவதில்லை. அது உங்களுக்கே நன்றாக தெரியும் என கூறியுள்ளார். புதின் எந்தவித பதற்றமும் இன்றி, மிக சாவகாசமுடனான குரலிலேயே பேசினார் என நான் நினைக்கிறேன் என்று ஜான்சன் கூறியுள்ளார். 

இதுபற்றிய பி.பி.சி. ஆவண படம் இன்று வெளிவரும் என கூறப்படுகிறது. அந்த தகவலில், ரஷியாவின் படையெடுப்புக்கு முன், நேட்டோவில் இணையும் தனது முயற்சிகள் தோல்வி அடைந்த விசயங்களை ஜெலன்ஸ்கி நினைத்து பார்ப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. உக்ரைன் மீது தொடுத்த போரால், மேற்கத்திய நாடுகளுக்கும் மற்றும் ரஷிய அதிபருக்கும் இடையே ஏற்பட்ட பரவலான விரிசல்களை விவரிக்கும் வகையில் அந்த ஆவண படம் செல்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory