» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கு தடையை நீக்க வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

வெள்ளி 27, ஜனவரி 2023 12:16:40 PM (IST)

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை தலிபான் அரசு நீக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், கல்வி பயில கொடுமைப்படுத்தும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது. குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory