» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ட்விட்டர் இணையதளத்தில் ‘எடிட் வசதி: கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் அறிமுகம்

புதன் 5, அக்டோபர் 2022 10:28:25 AM (IST)

ட்விட்டர் இணையதளத்தில் ‘எடிட்’ வசதி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பதியப்படும் வாக்கியத்தில் பிழைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை பதிவிட்ட பிறகும் திருத்திக் கொள்ளலாம். இது பதிவர்களுக்கு மிகத் தேவையான வசதியாக இருந்தாலும் இதுவரை ட்விட்டரில் இந்த வசதி இல்லை.

ட்விட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும்  தெரிவித்திருந்தது.  தற்போது, எடிட் சேவையை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகார்பூர்வ பயனார்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளது!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory