» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை : உலக நாடுகள் கண்டனம்

சனி 1, அக்டோபர் 2022 12:32:18 PM (IST)



ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது.  ஜப்பானின் கடலோர காவல் படை இத்தகவலை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.  வட கொரியா ஒரே வாரத்தில் 4வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory