» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. 

இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் ஏறத்தாழ ஒரு மாதம் காலம் கோத்தபய ராஜபக்சே தங்கியிருந்தார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.  தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அனுமதியளித்துள்ள அந்நாட்டு அரசு, அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம், அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory