» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தபய ராஜபக்சே: தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்!

புதன் 10, ஆகஸ்ட் 2022 3:41:53 PM (IST)

சிங்கப்பூரில் விசா முடிவடைய உள்ள நிலையில், தாய்லாந்தில் தஞ்சமடைய ராஜபக்சே, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில் அவருக்கு மேலும் 2 வாரம் விசா நீட்டிப்பு வழங்கும்படி சிங்கப்பூர் அரசிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory