» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பொறுப்பேற்பு

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 7:55:08 AM (IST)தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பெட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபராக கஸ்டாவோ பெட்ரோ நேற்று பொறுப்பேற்றுக் கொண்டாா். எம்-19 கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினரான அவா், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்தாா். 

சந்தை சாா்பு பொருளாதாரத்தில் முந்தைய ஆட்சியாளா்கள் சிறு சீா்திருத்தங்கள் மேற்கொண்டாலும், அதிகரிக்கும் வறுமை, வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. அதனைப் பயன்படுத்தி, இடதுசாரிக் கொள்கையையுடைய கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். இந்நிலையில், அவா் நாட்டின் புதிய அதிபராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டாா். 4 ஆண்டுகளுக்கு அவா் அதிபராக பதவி வகிப்பாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory