» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை தாக்குதல்: அல் கொய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 12:39:42 PM (IST)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் முக்கிய தலைவர் அய்மன் அல்-ஜவாஹ்ரி  கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவரான அய்மான்அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டார்.

அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் அல்-ஜவாஹ்ரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர்  சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory