» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு? இலங்கையில் மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா

திங்கள் 13, ஜூன் 2022 5:05:20 PM (IST)

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முறையாக டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், கடந்த 23 ஆண்டுகால் சட்டத்தில் அந்நாட்டு அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் இலங்கை பொதுஜன கட்சியின் சார்பில் மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்ட திருத்தம்படி, புதிய மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வசதியாக, எவ்வளவு பெரிய திட்டமாக இருந்தாலும் முறையான டெண்டர் விட வேண்டியது அவசியமில்லை. மாறாக ஆளும் அரசு யாருக்கு டெண்டர் கொடுக்க நினைக்கிறதோ, அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த சட்ட திருத்தத்திற்கு 120 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது. 

சட்ட திருத்தத்திற்கு எதிராக 36 எம்பிக்கள் வாக்களித்தனர். பிரபல இந்திய தொழிலபதிபர் அதானி நிறுவனத்துடன் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொள்ள வசதியாக, மின்சார சட்டம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டி உள்ளது. மேலும், மின்சார தொழிற்சங்கங்களும் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில்  இலங்கையின் வடகிழக்கு பகுதியில் காற்றாலை அமைக்கும் டெண்டரை அதானி குழுமத்திற்குத் தர, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில்  அதிபர் கோத்தபய ராஜபட்ச மூலமாக தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ சமீபத்தில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இதற்கு மறுப்பு தெரிவித்தார். 

அதன்பின்னர் மன உளைச்சல் காரணமாக, தான் இவ்வாறு தெரிவித்து விட்டதாகவும் தான் கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் மின்சார வாரியத் தலைவர் பதவியை பெர்டினாண்டோ இன்று ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நளிந்த இளங்கோகோன் நியமிக்கப்பட உள்ளதாகவும் மின்சார வாரியத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory