» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் இந்து கோவில்களை சேதப்படுத்திய மர்ம கும்பல் : சிறுபான்மை மக்கள் அச்சம்!

வியாழன் 9, ஜூன் 2022 12:08:54 PM (IST)



பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து கோவில் சிலைகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீமாரி மாதா கோவிலில் உள்ள சிலைகள் நேற்று  மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பாகிஸ்தானில் சமீபகாலமாக இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அக்டோபரில், கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். இருப்பினும், கணக்குப்படி படி, 90 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் நாட்டில் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் கலா பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்த சம்பவம் கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory