» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லை!

சனி 4, ஜூன் 2022 10:50:31 AM (IST)இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என எரிவாயு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்'  தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன.  இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆம்Jun 4, 2022 - 04:41:39 PM | Posted IP 162.1*****

குடும்ப ஆட்சியால் அவலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory