» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் பாகிஸ்தான் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

புதன் 1, ஜூன் 2022 4:06:03 PM (IST)

இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது என  பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும். இந்தியாவுடனான ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கை மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பற்றி நாங்கள் அறிவோம். இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. உரி, மதன்கோட் மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா-பாகிஸ்தான் இடைேயயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory