» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி : வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய் 31, மே 2022 4:21:28 PM (IST)

இலங்கையில் பல்வேறு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்வதால், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, கடந்த வாரத்தில் பெட்ரொல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தி உத்தரவிட்டனர். தொடர்ந்து, பிரதமர் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை ஏற்று தொலைதொடர்பு, பந்தயம், கேமிங், மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory