» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் விமான விமான விபத்து : 2ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்
திங்கள் 30, மே 2022 8:58:00 AM (IST)
நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக தீவிரப்பட்டுள்ளது.
‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்’ என்று அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறினாா்.
இந்த விமானம் பயணத் திட்டப்படி நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியான ஜோம்சோம் விமான நிலையத்தில் காலை 10.15 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்குள்ளாக பொக்காரா - ஜோம்சோம் விமான வழித்தடத்தில் கோரேபானி மலைப் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்ததாக விமான நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, ஜோம்சோமின் காஸா பகுதியில் மிகப் பெரிய வெடி சப்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததாக ஜோம்சோம் விமானநிலைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவா் கூறினாா்.
மேலும், ‘இந்த விமானம் தெளலாகிரி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது’ என்று காவல் துணை கண்காணிப்பாளா் ராம்குமாா் தானி கூறியதாக உள்ளூா் ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டா் மூலமாக விமானத்தைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டபோதிலும், மோசமான வானிலை காரணமாக தேடும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு நேபாள உள்துறை அமைச்சா் பால்கிருஷ்ணகாந்த் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளாா்.
அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் ராணுவம் போலீஸாரும் இணைந்து கூட்டாக ஈடுபட்டுள்ளனா்.ராணுவ ஹெலிகாப்டா் மட்டுமின்றி தனியாா் ஹெலிகாப்டா்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக நேபாள ராணுவத்தின் எம்ஐ-17 ஹெலிகாப்டரும் காத்மாண்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, காணாமல் போன விமானத்தின் விமானியின் கைப்பேசி சிக்னலை வைத்து, விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள பகுதியை நேபாள ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. இந்த நிலையில் நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக இன்று தீவிரப்பட்டுள்ளது. நேற்றிரவு விமானத்தை தேடும் பணிநிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் தொடங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)

இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உளவு கப்பல்: இந்தியாவை மிரட்டும் சீனா..!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:01:02 AM (IST)

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தபய ராஜபக்சே: தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்!
புதன் 10, ஆகஸ்ட் 2022 3:41:53 PM (IST)

அமெரிக்க வராலற்றில் இருண்ட காலம்: எப்.பி.ஐ. சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:36:47 AM (IST)
