» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் மே 9 வன்முறை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி விசாரணை!

வெள்ளி 27, மே 2022 12:50:25 PM (IST)இலங்கையில் மே 9-ல் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவருக்கு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது இதில் 10பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இரண்டு எமபிக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொழும்பில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சேவிடம் சி.ஐ.டி. போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடைபெற்றது.


மக்கள் கருத்து

ஒரு மூஞ்சிமே 29, 2022 - 01:21:27 PM | Posted IP 162.1*****

குடும்ப ஆட்சி என்றால் மூஞ்சை பாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory