» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு: 6 வாரங்களில் இடைக்கால பட்ஜெட்!

புதன் 25, மே 2022 4:57:26 PM (IST)

இலங்கை நிதித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அடுத்த 6 வாரத்திற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். 

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இலங்கையில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவியதால், மக்கள் வெகுண்டெழுந்தனர். ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினர்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு மந்திரிகளை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறாா். கடந்த மே 14-ஆம் தேதி 4 மந்திரிகளும், கடந்த மே 20-ஆம் தேதி 9 மந்திரிகளும் பதவியேற்றனா். இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். இருப்பினும் நிதி அமைச்சர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை. 

இந்நிலையில், இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். நிதித்துறை பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் அடுத்த ஆறு வாரத்திற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். மேலும், உள்கட்டமைப்பு திட்டங்களை குறைத்து, இரண்டு ஆண்டு நிவாரண திட்டங்களுக்கு நிதி திருப்பி விடப்படும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory