» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை: கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு

புதன் 18, மே 2022 4:22:32 PM (IST)சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை என கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்தார். 

2022ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில், யாரும் எதிர்பாராத வகையில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அதில் பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது: ‘தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா?  

ஒரு சர்வதிகாரி இருந்தால், சுதந்திரத்திற்கா போர் நடைபெற்றால், அனைத்தும் நமது ஒற்றுமையை பொறுத்தே இருக்கிறது. சினிமா ஒற்றுமைக்கு வெளியில் இருக்குமா? 2வது உலகப்போரில் ஹிட்லர் செய்த கொடூரங்களுக்கு எதிராக சார்லி சாப்ளின் தைரியமாக டிக்டேட்டர் என்ற படத்தை வெளியிட்டார். அது ஹிட்லரின் போரை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது. சாப்ளின் உண்மையான சர்வாதிகாரியை அழிக்கவில்லை. ஆனால் சினிமா மெளனம் காக்காமல் சத்தமாக பேசியது.

சினிமா ஊமை இல்லை என்பதை நிரூபிக்க புதிய சார்லி சாப்ளின் தேவைப்படுகிறது. சினிமா இன்னும் மெளனமாகத்தான் இருக்குமா அல்லது அநீதிக்கு எதிராக பேசுமா? இவ்வாறு அவர் உரையில் பேசினார். இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.


மக்கள் கருத்து

அட முட்டாள்மே 18, 2022 - 08:53:01 PM | Posted IP 162.1*****

அட கூத்தாடி உக்ரைன் அதிபர்.. ரஸ்சியாவிடம் சரண் அடைந்து விட்டு நாட்டு மக்களை காப்பாற்ற வேலைய பாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory