» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு

செவ்வாய் 17, மே 2022 4:55:18 PM (IST)பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் செய்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் பெண் ஒருவர்  நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது இது 2-வது முறையாகும்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory