» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி!

திங்கள் 16, மே 2022 11:41:26 AM (IST)நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10பேர் உயிரிழந்தனர். இனவெறி நோக்கத்திலே நடந்த இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பப்பலோ சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த சனிக்கிழமை காரில் வந்து இறங்கிய கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக  50 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 8 பேரும் 2 அமெரிக்கர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் போலீஸ்  அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி  தடுக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ்  அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரது பெயர் பெய்டன் ஜென்ட்ரான்(18) தான் படுகொலை செய்தபோது கறுப்பின சமூகத்தை குறிவைத்ததாக ஜென்ட்ரான் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் இனவெறி நோக்கத்திலே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களில் யூத எதிர்ப்பு, இனவெறி தொடர்பான வெள்ளை அறிக்கைகள் இருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory