» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிவிட்டரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தடை நீக்கம் : எலான் மஸ்க் அறிவிப்பு

புதன் 11, மே 2022 11:53:40 AM (IST)

டிவிட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தடையை நீக்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, டிவிட்டரில் எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனாலட் டிரம்பின் மீதான டிவிட்டர் தடை அகற்றவதாகவும் அவரை டிவிட்டரில் தடை செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியதால் அவா் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, டிவிட்டா் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory