» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கரோனா பரவல் அதிகரிப்பு: பஸ், ரயில் சேவை முடக்கம்!

வியாழன் 5, மே 2022 11:54:09 AM (IST)



சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ், ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.

சீனாவை கரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கடந்த 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. 

நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பீஜிங்கில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பீஜிங்கில் பகுதியளவுக்கு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 வழித்தடங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக பீஜிங்கில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஓட்டல்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory