» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

செவ்வாய் 3, மே 2022 4:44:29 PM (IST)



இலங்கையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் தேசிய தலைவர்களை சந்தித்தார். மேலும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை அவர் சந்தித்து பேசினார். 

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக கடந்த சனிக்கிழமை இரவு 12.45 மணிக்கு இலங்கை புறப்பட்டு சென்றார். ஆனால் அவரது பயணத் திட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக பல திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. எனவே மே 1-ந்தேதி தமிழர்கள் நடத்தும் தொழிலாளர்கள் தின விழாவில் பிரதமர் மோடியை அழைத்து நன்றி சொல்ல திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே அவருக்கு பதில் அண்ணாமலை அனுப்பப்பட்டுள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 3 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை கொழும்புவில் இருந்து 182 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பழமையான சீதையம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

யாழ்ப்பாணம் சென்ற அவர் தமிழர்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும் சென்றார். இந்த கோவில் இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் மிக பழமை வாய்ந்த கோவில். இலங்கையில் இருக்கும் ஒரே சைவ மடம் இதுதான். மதுரை ஆதீனத்துக்கும் இந்த மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கந்தசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்திக்க அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த நாட்டு அரசாங்கம் ஜெயிலில் தமிழக மீனவர்களை சந்திக்க அனுமதி அளித்துள்ளது.

யாழ்ப்பாணம் ஜெயிலுக்கு சென்று மீனவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் உடைகள் கொண்டு சென்றார். அவற்றை மீனவர்களிடம் நேரில் வழங்கினார். அவர்களிடம் தைரியமாக இருக்கும்படி கூறிய அண்ணாமலை, மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்திய தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுதலையாவீர்கள் என்று உறுதியளித்தார்.அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தின்போது தமிழ் தலைவர்களையும் சந்தித்து பேசினார். யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா, எம்.பி.சுமந்த்ரன், சி.வி.கே.சிவஞானம், எம்.பி.க்கள் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன், டாக்டர் சத்யலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சந்திப்பு முடிந்ததும் தமிழ் தேசிய தலைவர்களுடன் மதிய விருந்து சாப்பிட்டார். இன்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தனது இலங்கை பயணத்தை முடித்து விட்டு நள்ளிரவு சென்னை புறப்படுகிறார். நாளை அதிகாலை 4 மணியளவில் சென்னை திரும்பும் அவருக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து

ஈழம்மே 5, 2022 - 05:29:56 AM | Posted IP 108.1*****

திராவிட குரூப் எல்லாம் எச்ச சோறுக்கு கொலைகாரன் ராஜபக்க்ஷே அழைத்தால் போய் சாப்டுட்டு வரும்

ஆனந்தன்மே 4, 2022 - 06:34:22 PM | Posted IP 162.1*****

திராவிடம் பேசுபவன் பச்சை தமிழன் இல்லை தெலுங்கன் அல்லது கன்னடனாக இருப்பான்

சேகர்மே 4, 2022 - 02:20:17 PM | Posted IP 108.1*****

பச்சை தமிழன்(அண்ணாமலை) மீண்டும் தமிழகத்தை ஆளும் நாள் விரைவில் வரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory