» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய வகை கரோனா தொற்று அலை ஏற்படும் அபாயம் : ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

திங்கள் 2, மே 2022 8:47:27 AM (IST)

புதிய வகை கரோனா  தொற்று அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவின் இரு துணை ரகங்களால், கரோனாவுக்கு எதிராக ஏற்கெனவே உடலில் உருவாகியுள்ள எதிா்ப்பாற்றலை அழிக்க முடியும் என்பதால், அந்த துணை ரகங்கள் புதிய நோய்த்தொற்று அலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.

பிஏ.4, பிஏ.5 ஆகிய அந்த இரு துணை ரகங்களால் பாதிக்கப்பட்ட 39 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவா்களில் 15 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த இரு துணை ரகங்களும் கண்காணிக்கப்பட வேண்டிய கரோனாக்கள் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory