» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திடீர் நடவடிக்கை

வெள்ளி 29, ஏப்ரல் 2022 4:08:10 PM (IST)

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுக ஆதரவளித்து வருவதால், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. 

அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ம் தேதியன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘யுஎஸ் ஸ்பெஷல் - 301’ என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த கருப்புப் பட்டியலில் உள்ளன. 

தற்போது இந்தியாவை முதன்முறையாக அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால், இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரில் அமெரிக்காவிற்கு இந்தியா ஆதரவு அளிக்காததால், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், இனி வரும்காலத்தில் இந்தியா மீது அமெரிக்கா அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் நகலெடுப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் புகாரின் பேரில் இந்தியாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அர்ஜென்டினா, சிலி, இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில் அலுவலகத்தில் ஏற்கனவே இருந்தன.

ஆனால் தற்போது அவை தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு தடுப்புப் பட்டியலில் இருந்த உக்ரைனை அமெரிக்கா அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதேநேரம் கள்ள மார்க்கெட் மற்றும் திருட்டு பொருட்கள், அறிவுசார் சொத்துரிமை அமலாக்க நீதிமன்றங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி, சவுதி அரேபியாவை அமெரிக்க வர்த்தக அலுவலகம் முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கூறுகையில், ‘அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில், எங்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்தியா உட்பட 7 நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நாடுகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன’ என்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

sankarApr 29, 2022 - 08:47:01 PM | Posted IP 108.1*****

us is no more a dictator - they lost their face already

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory