» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்த முடிவு : வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு

புதன் 27, ஏப்ரல் 2022 11:26:31 AM (IST)



வடகொரியாவின் அணு ஆயுத திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் மேலும் மேலும் அந்த நாடு அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியாவின் 90-வது ராணுவம் நிறுவன தினத்தையொட்டி தலைநகர் பையாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இப்பேரணியின் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நீவீன ஏவுகணைகள் உள்பட ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் ஏராளமான ஆயுதங்கள் பேரணியில் வைக்கப்பட்டிருந்தன. 

ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிம் ஜோங் உன் பேசியது, நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால் நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory