» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இசை நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி : பிரபல ராப் பாடகர்கள் மீது வழக்கு

செவ்வாய் 9, நவம்பர் 2021 3:43:10 PM (IST)



அமெரிக்காவில் இசைவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரபல ராப் பாடகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5ம் தேதி இரவு பிரபல ராப் பாடகர் டிராவிஸ் காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். டிராவிஸ் ஸ்காட் பாடும்போது, மேடை நோக்கி வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. 

இதனால், ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெரிசலில்  சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக ராப் பாடகர்கள் டிராவிஸ் ஸ்காட், டிரேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த கிறிஸ்டியன் பாரடேஸ் என்ற வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.இதேபோல் டிராவிஸ் ஸ்காட் மற்றும் அஸ்ட்ரோவேல்டு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பென் கிரம்ப் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory