» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மாயம்

சனி 6, நவம்பர் 2021 12:27:13 PM (IST)



ஆப்கானிஸ்தானில் நடந்த குழப்பத்தில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மாயமாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆகஸ்ட் 19 ந்தேதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.

அப்போது, ஒரு  குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.  ஆனால் தற்போது அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கபடவில்லை என்றும் பெற்றோர்கள் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மிர்சா அலி அகமதியும் அவரது மனைவி சுரயாவும்  ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வாயில்களுக்கு வெளியே   நாட்டை விட்டு வெளியேற போராட்டிக்கொண்டு இருந்தனர்.  நுழைவாயிலுக்கு விரைவில் செல்வோம் என்று நினைத்து. அவர்கள் தங்கள் குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஓப்படைத்தனர்.

மிர்சா அலி, (35) சுரயா (32) தம்பதிக்கு  5 குழந்தைகள்  17, 9, 6 மற்றும் 3 வயது, உடைய குழந்தைகள் கத்தாருக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் ஒரு வெளியேற்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு இறுதியில் அமெரிக்காவில் தரையிறக்கப்பட்டனர். தற்போது அவரது குடும்பம்  டெக்சாஸில் உள்ள போர்ட் பிளிஸ்ஸில் மற்ற ஆப்கானிய அகதிகளுடன்  தங்கி உள்ளனர். அவர்களுக்கு இங்கு உறவினர்கள் இல்லை.

10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகத்தில் மிர்சா அலி காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மிர்சா அலி, தான் சந்திக்கும் ஒவ்வொரு அதிகாரியிடமும் தனது குழந்தையின் இருப்பிடம் குறித்து தீவிரமாக கேட்டு வருகிறார். இது குறித்து மிர்சா அலி கூறியதாவது; நான் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன், என் குழந்தையைப் பற்றிக் கேட்டேன்.குழந்தையை எங்கே வைத்திருக்கிறார்கள் என  எங்களுக்கு தெரியாது என்று அவர்கள் சொன்னார்கள் என கூறினார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அமெரிக்க தளங்கள் மற்றும் வெளிநாட்டு இடங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  குழந்தை கடைசியாக காபூல் விமான நிலையத்தில் குழப்பத்தின் போது அமெரிக்க பாதுகப்பு வீரரிடம்  ஒப்படைக்கப்பட்டது ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாராலும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory