» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

புதன் 3, நவம்பர் 2021 12:18:54 PM (IST)

இந்தோனேசியாவில் நேற்று இரவு 6.1  ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை

இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய தீவுநாடாகும். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தீவு நகரான மலுகு மாகாணம் மலுகு டென்கரா பரட் மாவட்டத்தின் வடகிழக்கே 137 கிலோமீட்டர் தூரத்தில் 123 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11.43 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory