» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை: அமெரிக்காவுக்கு தலீபான்கள் எச்சரிக்கை

திங்கள் 1, நவம்பர் 2021 4:07:39 PM (IST)

ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை.சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலீபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. மேலும் தலீபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலீபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது: அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை. 

பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும்.தலீபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே . போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமையாகும். போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது.


மக்கள் கருத்து

saamiNov 3, 2021 - 11:01:25 AM | Posted IP 173.2*****

athukku munnala sandapottu alinjiruveengale

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory