» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது!

திங்கள் 1, நவம்பர் 2021 3:53:55 PM (IST)



ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பானில் கடந்த மாத தொடக்கத்தில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புமியோ கிஷிடா, அந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து தனது தலைமையிலான புதிய அரசு பணியை தொடங்குவதற்கு முன்பு வாக்காளர்களின் ஆணையை பெற விரும்புவதாக கூறி அதிகாரமிக்க நாடாளுமன்ற கீழவையை கலைத்து, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 465 இடங்களை கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில்,  வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் புமியோ கிஷிடா, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.  இதன் மூலம் 10வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் புமியோ  கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory