» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச சமூகம் அடுத்த தொற்றுநோய்க்கு தயாராக வேண்டும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஞாயிறு 31, அக்டோபர் 2021 10:10:31 AM (IST)

அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகும் வகையில் சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறினார்.

ஜி20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒரு கட்டத்தில், நம்மால் கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் வெளிப்படும் என்பது உயிரியல் உறுதி. எனவே அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகும் வகையில் தற்போதைய தொற்றிலிருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். 

இதற்காக, வலுப்படுத்தப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் நிலையான நிதியளிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு தேவை எனக்கூறிய கேப்ரியேசஸ், இது தொற்று நோய்களுக்கு விரைவான எதிர் தாக்குதலையும், சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான ஒரு புதிய வழிமுறை எனவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

saamiNov 3, 2021 - 11:00:48 AM | Posted IP 108.1*****

ithu oru dubakoor amaippu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory