» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி!

சனி 30, அக்டோபர் 2021 5:15:56 PM (IST)

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதன் மூலம் 2.8 கோடி சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு நபர் ஒருவருக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே தடுப்பு மருந்து அளிக்கப்பட உள்ளது.  இந்த அளவானது, பெரியவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்தில் 3-ல் ஒரு பங்கு ஆகும். ஏற்கனவே சீனா, சிலி, கியூபா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory