» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

புதன் 20, அக்டோபர் 2021 9:35:02 PM (IST)

ரஷியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என அதிபர் புதின் அறிவித்துள்ளார். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,015 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன் 2,25,325 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுதவிர, புதிதாக 33,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,60,752-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

குலுக்கல் பரிசு போன்ற திட்டங்கள் மூலம் ரஷியாவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனா். எனினும், தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அங்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. கரோனாவால் ரஷியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்கான பொதுமுடக்கத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு தயங்கி வருகிறது. 

இதன் காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி பலி எண்ணிக்கை தொடா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரஷியா முழுவதற்கும் அக்டோபர் 30லிருந்து நவம்பர் 7ம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. ரஷியர்கள் பொறுப்பை உணர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory